Sep 20, 2025 - 04:00 PM -
0
யாழ்ப்பாணத்தில், ஏழாலை - மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் நேற்று (19) பதிவாகியுள்ளது.
மானிப்பாய் - சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த சிவஸ்ரீ பிரபாகரக்குருக்களின் மகன் சாரூஷன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவருக்கு செப்டம்பர் 14 முதல் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அவர் வைரவர் ஆலயத்தில் பூஜை செய்ய சென்றபோது மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது எனவும், இது தெரிந்து உறவினர்கள் ஆலயத்திற்கு சென்று பார்த்தபோது, சாருஜன் அசைவற்ற நிலையில் இருந்தார்.
அவரை உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
உடற்கூற்று பரிசோதனைகளில், நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
--

