வடக்கு
போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

Sep 20, 2025 - 05:47 PM -

0

போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்புத்துறை பகுதியில் இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போதை மாத்திரைகளை நீண்ட நாட்களாக வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் இன்று (20) யாழ்ப்பாணம் பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன் போது 180 போதை மாத்திரைகளுடன் 18, 24, 22 வயதுடைய 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையை சேர்ந்த மூன்று இளைஞர்களாவர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05