Sep 20, 2025 - 07:08 PM -
0
அபுதாபியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான ஆசியக் கிண்ண போட்டியின் போது, ஐ.சி.சி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான நூர் அஹமட் மற்றும் முஜீப்பூர் ரஹ்மான் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கண்டிக்கப்பட்டுள்ளனர்.
"சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டியதால் 2.8 ஒழுக்க விதியை நூர் அஹமட் மீறியதாகக் மீறியதாகவும், சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள், தரை உபகரணங்கள் அல்லது சாதனங்கள் மற்றும் பொருத்துதல்களை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பான பிரிவு 2.2 ஐ முஜீப் மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் கடந்த 24 மாதத்தில் ஐ.சி.சி ஒழுக்க விதிகளை மீறிய முதல் சந்தர்ப்பம் என்பதால் இருவரும் கண்டிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு புள்ளியும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தங்கள் மீதான நடுவர்களின் குற்றச்சாட்டை இருவரும் ஏற்றுக்கொண்ட நிலையில் மேலதிக விசாரணைகள் தேவையில்லை எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இது தவிர, இரு வீரர்களின் ஒழுக்காற்று பதிவுகளில் ஒரு தகுதி இழப்பு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது இது 24 மாத காலத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் முதல் குற்றமாகும்.

