செய்திகள்
இந்திய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

Sep 21, 2025 - 10:56 AM -

0

இந்திய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SATPURA’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (20) நாட்டிற்கு வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 

இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய இந்திய கப்பலுக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நாட்டை வந்தடைந்த போர்க் கப்பலான ‘INS SATPURA’ 142.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 403 பணியாளர்களைக் கொண்டுள்ளது. 

கப்பல் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில் அதன் பணியாளர்களை இலங்கையின் முக்கியமான இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05