Sep 22, 2025 - 09:15 AM -
0
இன்று (06) சந்திர பகவான் கன்னி ராசியில் பயணிக்கிறார். இன்று நவராத்திரி அம்மன் வழிபாடு செய்ய வேண்டிய தினம். இன்று உருவாகும் புதாதித்ய யோகத்தால் சில ராசிகளுக்கு அற்புதங்கள் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும். இன்று கும்பத்தில் உள்ள அவிட்டம், சதயம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
மேஷம் ராசிபலன்
மேஷ ராசிக்கு இன்று தொழில் தொடர்பான விஷயங்களில் நிறைய அலைச்சல் ஏற்படும். இருப்பினும் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம். இன்று உங்கள் வீட்டில் விசேஷங்கள் தொடர்பாக சிறப்பு ஏற்பாடுகள் செய்வீர்கள். இன்று அண்டை வீட்டாரை அனுசரித்து செல்லவும். உங்கள் வேலை மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படவும். சில விஷயங்களில் உங்களுடைய பார்வை மாறும். நிதி சார்ந்த விஷயங்களில் சற்று பலவீனமாக உணர்வீர்கள். இன்று குழந்தைகள் தொடர்பாக தேவையற்ற மன குழப்பம் ஏற்படும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பான விஷயங்களில் கடுமையான சூழல் நிலவும். கடின உழைப்பிற்கு பின்னரை வெற்றி அடைய முடியும். உங்களுடைய குடும்பத்தினரிடம் நேரம் செலவிட முயற்சிக்கவும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க திட்டமிடுவீர்கள். உங்கள் வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்காததால் வருத்தப்படுவீர்கள். இன்று உங்கள் துணையுடன் இனிமையாக பேசி மகிழக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உங்களின் உறவு வலுவாக இருக்கும். சகோதரர்களே ஆலோசனை உங்கள் வணிகத்தில் நல்ல பலனைத் தரும். மாணவர்கள் அறிவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்குவீர்கள். ஆனால் இந்த தவிர்க்க முடியாத வேலைகளால் தொந்தரவு ஏற்படும். இன்று உங்கள் செயல்பாடுகளில் கவலை நிறைந்திருக்கும். நிலுவையில் உள்ள சில பணிகளை முடிக்க முயற்சிப்பீர்கள். இன்று உங்களுடைய சூழல் பரபரப்பானதாக இருக்கும். உங்கள் மனைவியின் உடல்நிலை குறித்து கவனமாக இருக்கவும். இன்று உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை இருக்கும். இன்று நண்பர்களின் ஆதரவும் ஆலோசனையால் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கடக ராசி பலன்
கடக ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு இன்று இனிமையான சூழல் நிலவும். இன்று உங்களுடைய செல்வ நிலை அதிகரிக்கும். அதன் காரணமாக புதிய சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதற்கான முயற்சிகளில் இறங்குவார்கள். நன்மை அதிகமாக நடக்கக்கூடிய நாள். இன்று உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்க கூடிய நாள். இன்று எல்லா வகையிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வணிகம் தொடர்பான முயற்சிகள் நல்ல பலனை தரும். சிலருக்கு இடமாற்றம் பெற வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய வேலைகளை முழு விசுவாசத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் தொழிலில் நெருங்கிய கூட்டாளிகளின் அன்பையும், ஆலோசனையும் கிடைக்கும். உங்கள் வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். உங்களுடைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு அனைத்து விதத்தில் இருந்து உங்களுக்கு ஆதரவை பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெறுவீர்கள். உங்களின் குடும்பம் மற்றும் பணி இடத்தில் சூழலும் நன்மைகள் அதிகமாகவும் கிடைக்கும். இன்று வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தவும். இன்று உங்களுடைய அனைத்து பணிகளும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். அதிர்ஷ்டம் அதிகமாக கிடைக்கக்கூடிய நாள்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான மற்றும் வளம் நிறைந்த நாளாக அமையும். இன்றைய கிரக அமைப்பின் காரணமாக செல்வநிலை அதிகரிக்கும். இன்று உங்களுடைய தோற்ற போலீவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று நெருங்கிய நண்பர்களின் உதவி மற்றும் ஆலோசனை கிடைக்கும். உங்களுடைய தவறுகளை சரி செய்யலாம். உங்களின் நேரத்தை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். இன்று உங்களுடைய வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுக்கு திருப்தியான மனநிலை இருக்கும். இன்று உங்களின் வேலையை மேம்படுத்த குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏற்படும். நிபுணர்களின் ஆலோசனையால் எதிர்காலத்தில் பலன் தரக்கூடிய நிதி திட்டங்களில் சேருவீர்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சேரக்கூடிய நாளாக இருக்கும். இன்று எந்த ஒரு பெரிய வேலை திட்டங்களையும் சரியான விடை திட்டமிடலுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு கிரகங்களின் அமைப்பில் கணிசமான அளவு செல்வம் சேரும். உங்களுடைய வேலையில் தடை தாமதங்கள் நீங்கும். தடைபட்ட திட்டங்களை செய்து முடிப்பீர்கள். செல்வம் ஈட்டுவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த தொழில் செய்யக் கூடியவர்களுக்கு முன்னேற்றமும் லாபமும் சேரும். இன்று கடினமான நேரத்தை நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டு பெற வாய்ப்பு உண்டு.
மகரம் ராசிபலன்
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு பரபரப்பான நாளாக அமையும். இன்று உங்களின் வேலைகளை முடிக்க திட்டமிடமும் கூடுதல் கவனமும் தேவைப்படும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட நினைப்பீர்கள் இன்று உங்கள் தொழிலில் கவனம் செலுத்த நினைப்பீர்கள். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் கணக்கு வழக்குகளை கவனமாக பராமரிக்கவும். இன்று உங்களுடைய குடும்ப செலவுகள் அதிகரிக்கும். தான தர்மம் செய்ய ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம் ராசிபலன்
கும்ப ராசிக்கு கிரகங்களின் அமைப்பால் சிறப்பானது சூழல் நிலவும். உங்களின் செல்வநிலை அதிகரிக்கும். வேலை மற்றும் புகழ் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய செல்வம் வேலை புகழ் அதிகரிக்கும். எதிரிகளால் உங்களுக்கு கவலை ஏற்படும். சூழ்நிலை உணர்ந்து உங்கள் வேலைகளை திட்டமிட்டு செய்யவும். இன்றைய சூழல் உங்களுக்கு வெற்றி மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அதனால் உற்சாகமான மனநிலையுடன் இருப்பீர்கள். திருமணம் சார்ந்த நல்ல தகவல் கிடைக்கும்.
மீன ராசி பலன்
மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சி, செல்வ செழிப்பு சேரக்கூடிய நாள். அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக உணர்கிறீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு குறுகிய பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. இன்று குடும்பத்தின் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் உங்கள் இருவரிடையே இணக்கமான சூழல் இருக்கும்.

