Sep 22, 2025 - 09:31 AM -
0
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழுப்பு பகுதியில் நீண்ட நாட்களாக ஐஸ் பாவனையில் ஈடுபட்டு வந்த 27 வயது இளைஞன் ஐஸ் பாவனைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 3,600 மில்லிகிராம் ஐஸ் போதை மாத்திரைகள் அதனைப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
--

