Sep 22, 2025 - 11:38 AM -
0
17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இடம்பெற்று வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 2 ஆவது ஆட்டம் துபாயில் நேற்று (21) நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து, 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய அணி தலைவர் சூர்யகுமார் யாதவ்,
"முதலில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை Rivalry எனக் கூறாதீர்கள். இரு அணிகளும் 15 - 20 ஆட்டங்களில் விளையாடி, 7 - 7 அல்லது 8 - 7 என வெற்றி பெற்றிருந்தால் அப்படிச் சொல்லலாம். ஆனால் 10 - 1 அல்லது 10 - 0 ஆக இருந்தால் அது எப்படி Rivalry ஆகும்? அதனால் இனிமேல் இது Rivalry-யே அல்ல" என்று கூறி சிரித்தார்.

