Sep 22, 2025 - 02:14 PM -
0
ஸ்பைடர்மேன் Brand New Day படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகரான டாம் ஹாலண்ட் ஹீரோவாக நடித்து வர, டெஸ்டின் டேனியல் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், படப்பிடிப்பில் நடிகர் டாம் ஹாலண்ட் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சண்டை காட்சியின் போது, ஸ்டண்ட் காட்சியில் இந்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் டாம் ஹாலண்டுக்கு, லேசான மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் முழுமையாக குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மார்வல் படமாக உருவாகி வரும் ஸ்பைடர்மேன் Brand New Day, அடுத்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

