Sep 22, 2025 - 03:18 PM -
0
விசேட அதிரடிப்படையினரால் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான புனரமைப்பு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.
யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கடந்த 20 ஆம் திகதி T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படுவதற்கு இணங்க விடயம் தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று (21) ரவைகளை மீட்டெடுப்பதற்கான அனுமதியை கோரியதற்கிணங்க இன்று ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று காலை ரவைகள் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

