வடக்கு
அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம்

Sep 22, 2025 - 03:38 PM -

0

அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம்

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளோம் தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அவற்றிற்கு தடை வராமல் அடுத்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்வோம் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தொழில் திணைக்களத்தின் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தில் நடைபெறும் நடமாடும் சேவையை நிகழ்வில் கலந்து கொணடதோடு அலுவலத்தையும் கண்காணித்தார். 

இந்நிகழ்வில் S.சிவறஞ்சினி வடமாகாண பரத் தொழில் ஆணையாளர், K.நாகேந்திரன் - வடமாகாண அலுவலக உதவி தொழில் ஆணையாளர், A.அன்ரன் தனேஸ் - யாழ். மாவட்ட உதவி தொழில் ஆணையாளர், யாழ். மாவட்ட தொழில் திணைக்கள அதிகாரிகள் நடமாடும் சேவையை பெற வந்த பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05