Sep 23, 2025 - 11:14 AM -
0
17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்த நிலையில் அபுதாபியில் இன்று (23) நடக்கும் சூப்பர் 4 சுற்றின் 3 ஆவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷிடமும், பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோற்றது.
அதனால் இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் முக்கிய போட்டியாகும். இதில் தோல்வி அடையும் அணி ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13 இல் பாகிஸ்தானும், 10 இல் இலங்கையும் வெற்றி பெற்றன. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களிலும் இலங்கையே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

