Sep 23, 2025 - 01:14 PM -
0
கடந்த 21 ஆம் திகதி மாலை 9:30 மணியளவில் நுவரெலியா நகரில் இருந்து உடப்புஸ்சல்லாவ வீதியில் அதிக வேகமாக சென்ற லொறி மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோதி காலை விபத்துக்குள்ளாகியதில், தமது வீட்டிலிருந்து கடமைக்கு சென்ற 21 வயது மதிக்கத்தக்க இளைஞன் விபத்தில் சிக்குண்டு நுவரெலியா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் நேற்று (22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குறித்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட வாகன சாரதி நேற்று மாலை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியவுடன் இரு தரப்பினரையும் விசாரித்த நீதவான் கே ஜி பி எச் தர்மதாச லொறி சாரதியை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சாரதி சார்பாக வழக்கறிஞர் சுஜீவ கவுசல்யா டயஸ் முன்னிலையாகி இருந்தார்.
உயிரிழந்த இளைஞர் சார்பாக நுவரெலியா போக்குவரத்து பிரிவின் பொலிஸ் பரிசோதகர் குமார யாப்பா உட்பட குழுவினர் ஆஜராகி இருந்தனர்.
இதையடுத்து நுவரெலியா போக்குவரத்து துறை பொலிஸார் நீதிமன்றத்தின் முன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்திற்கு பிரதான காரணமாக அதிக வேகமாக சென்ற லோறி மற்றும் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாகவும் நீதிமன்றத்தின் முன் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த வாகன சாரதி இதற்கு முன்னதாக பலமுறை இவ்வாறு மதுபோதையில் வாகன செலுத்தியதாக குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டவர் ஆகும் எனவும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் நுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய மனேத் அபூர்வ என்னும் இளைஞர் ஆவார்.
உயிரிழந்த இளைஞர் மற்றும் லொரி சாரதி ஆகிய இவருடைய பிறந்த நாளும், அவ் இளைஞன் உயிரிழந்த அதே நாளிலேயே காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
--

