சினிமா
மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

Sep 23, 2025 - 05:26 PM -

0

மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் மதராஸி. இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்திருந்தார். 

இவர்களுடன் இணைந்து வித்யுத் ஜாம்வல், பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த மதராஸி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 101.5 கோடி வரை வசூல் செய்தது. 

திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுள்ள மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, வருகிற அக்டோபர் 3 ஆம் திகதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகும் என தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05