Sep 24, 2025 - 08:52 AM -
0
இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த சூறாவளி காரணமாக தாய்வானில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வௌ்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.
தைவானின் கிழக்கு ஹுவாலியன் கவுண்டியில் உள்ள ஒரு ஏரியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் 14 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த அனர்த்தத்தில் 124 பேர் காணாமல் போயுள்ளதாக தாய்வானின் தீயணைப்பு படை அறிவித்துள்ளது.
தாய்வானின் பல பகுதிகளில் தொடர்ந்தும் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த ஆண்டின் வலிமையான சூறாவளிக்கு முன்னதாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் தங்களது பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் ரகாசா சூறாவளி ஹொங்கொங்கை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணிநேரம் மூடப்பட்டுள்ளது.

