Sep 25, 2025 - 09:45 AM -
0
லிந்துலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வலகா தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்ற குடும்பஸ்தர் இன்று (25) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய கிட்டணசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (24) பிற்பகல் தேயிலை மலைப்பகுதிக்கு விறகு வெட்டச் சென்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில் பிரதேச மக்கள் காட்டு பகுதிகளில் தேடியுள்ளனர்.
இவ்வாறு அதிகாலை வரை மேற்கொண்ட தேடுலின் பின்னர் இன்று காலை தேயிலை மலைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டப் பின்னர் சட்ட வைத்திய பரிசோதனைக்காக லிந்துலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்தீச்செல்லப்படும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
--

