Sep 25, 2025 - 10:39 AM -
0
துபாயில் நடைபெற்று வரும் 17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
இதனிடையே, ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சச்சரவுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஹாரிஸ் ரவூப், சாஹிப்தாவுக்கு எதிராக ஐ.சி.சி.யிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின் போது இந்திய வீரர்களுக்கு கோபம் ஏற்படும் வகையில் சைகைகளை செய்ததாக பாகிஸ்தான் வீரர்கள் மீது இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

