செய்திகள்
பங்களாதேஷூக்கு பாகிஸ்தான் நிர்ணயித்த வெற்றி இலக்கு

Sep 25, 2025 - 09:53 PM -

0

பங்களாதேஷூக்கு பாகிஸ்தான் நிர்ணயித்த வெற்றி இலக்கு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் தற்போது பாகிஸ்தான் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதி வருகின்றன. 

டுபாயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mohammad Haris 31 ஓட்டங்களையும், Mohammad Nawaz 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taskin Ahmed 03 விக்கெட்டுக்களையும், Mahedi Hasan, Rishad Hossain ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதன்படி பங்களாதேஷ் அணிக்கு 136 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05