Sep 26, 2025 - 02:08 PM -
0
யாழ். சாவகச்சேரி A9 வீதி நுணாவில் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
சாவகச்சேரியில் இருந்து யாழ். நோக்கி சென்ற டிப்பரை அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண் முந்திச்செல்ல முற்பட்ட வேளை எதிர் திசையில் யாழில் இருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற இளைஞன் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞன் டிப்பருக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து சம்பவத்தில் மீசாலை புத்தூர் சந்தி பகுதியை 20 வயதான திலகீஸ்வரன் ஜதுஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--

