விளையாட்டு
பாகிஸ்தான் அணி தலைவர் சவால்

Sep 26, 2025 - 06:40 PM -

0

பாகிஸ்தான் அணி தலைவர் சவால்

17 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் துபாய், அபுதாபியில் நடந்து வருகிறது. நேற்று (25) நடந்த சூப்பர் - 4 சுற்று போட்டியில் பங்களாதேஷ் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 28 ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதுகிறது. 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணி தலைவர் சல்மான் ஆகா தெரிவித்ததாவது, 

இந்த மாதிரியான ஆட்டங்களில் நீங்கள் வெற்றி பெற முடிந்தால், நீங்கள் ஒரு சிறந்த அணியாக இருக்க வேண்டும். 

அனைத்து வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். துடுப்பாட்டத்திலும் சில முன்னேற்றம் தேவைப்படுகிறது. அதற்காக நாங்கள் உழைப்போம். ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் பந்து வீசிய விதம் சிறப்பானது. வெற்றி பெறுவதற்கான வழிகளை நாங்கள் கண்டு பிடித்து வருகிறோம். 

இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம். மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் யாரையும் வெல்லும் அளவுக்கு நல்ல அணி. இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவை வெல்ல முயற்சிப்போம். இந்தியா உட்பட எந்த அணியையும் வெல்லும் குணம் எங்களது அணிக்கு உள்ளது. இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

அதேபோல் ஆட்ட நாயகன் விருது வென்ற வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி கூறும் போது, இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியை எதிர்நோக்கி இருக்கிறோம். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05