செய்திகள்
நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள்

Sep 26, 2025 - 09:13 PM -

0

நேதன்யாகு பேசும் போது எழுந்து சென்ற பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 

 

இதில் ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். மேலும், பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

 

இதன்படி, இன்று இரவு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேச அழைக்கப்பட்டார். 

 

அப்போது, அரங்கத்தில் இருந்த பிரதிநிதிகள் எழுந்து வெளியேறினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினர்.

 

என்றாலும், நேதன்யாகு வெறிச்சோடிய ஐ.நா. சபை பொதுக் கூட்டத்தில் பேசினார். 

 

அப்போது அவர் பேசியதாவது:-

 

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம். பிணைக்கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம்.

 

உலகின் பெரும்பகுதியினர் ஒக்டோபர் 7ஆம் திகதியை நினைவு கொள்வதில்லை. ஆனால் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதைவிட, தீமையை ஏற்றுக் கொள்கின்றனர். 

 

பொது வெளியில் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் பல தலைவர்கள், இரகசியமாக (மூடிய அறைக்குள்) நன்றி தெரிவிக்கின்றனர்.

 

பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் சில நாடுகளின் முடிவு, அப்பாவி யூத மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும். எங்களுடைய தொண்டையில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்க அனுமதிக்கமாட்டோம்.

 

இவ்வாறு நேதன்யாகு தெரிவித்தார்.

 
 

 

 

Comments
0

MOST READ
01
02
03
04
05