சினிமா
விஜய்யை கைது செய்ய வேண்டும்-பதிவிட்ட பிரபல நடிகையால் பரபரப்பு

Sep 28, 2025 - 04:37 PM -

0

விஜய்யை கைது செய்ய வேண்டும்-பதிவிட்ட பிரபல நடிகையால் பரபரப்பு

கரூரில் நடந்த அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து, விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பிரபல நடிகை ஓவியா செய்த இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது கரூர் பரப்புரையில் நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் 13 ஆண்கள் 17 பெண்கள் உள்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதையடுத்து, சென்னை திரும்பிய விஜய்க்கும் அவரது வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்குவதாக அறிவித்ததோடு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கும் ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். 

விஜய்யிடம், நேற்று கரூர் மாநாட்டில் நடந்த சம்பவம் குறித்து விமான நிலையத்தில் கேள்வி கேட்கப்பட்டது. சென்னைக்கு விமானத்தில் வருவதற்காக கரூர் விமான நிலையத்திற்கு வந்த அவர், பத்திரிகையாளர்களுக்கு பதில் அளிக்காமல் கையை காண்பித்து விட்டு கிளம்பிவிட்டார். 

இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர், “இந்த விஷயத்திற்கு விஜய் பொருப்பேற்காமல் இப்படி செல்வது சரியா?” என்று கேள்வி கேட்டனர். சம்பவம் முடிந்து நான்கு மணி நேரத்திற்கு பிறகு, அவர் இது தன் மனதை நொறுக்குவதாக பதிவிட்டார். 

விஜய்யை பார்க்க, மதியத்தில் இருந்து கூட்டம் பெரிதாக கூடியுள்ளது. ஆனால், விஜய் வர தாமதம் ஆனதால் கூட்டத்தினர் கட்டுக்கடங்காமல் போனதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விஜய்யும் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் சிலர், அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறி வந்தனர். 

பிரபல நடிகை ஓவியா, விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தவெக தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் அவரை சரமாரியாக இணையத்தில் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து வந்தனர். 

இதையடுத்து, தனது பதிவை நீக்கிய ஓவியா, பின்னர் தன்னை யாரெல்லாம் திட்டினார்களோ அந்த கமெண்ட்களை ஸ்கிரீன் ஷாட் செய்து அதனை மீண்டும் தனது இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டார். 

கரூருக்கு நேற்றைய தினமே கருப்பு நாளாக சொல்லப்படுகிறது. காரணம், இத்தனை உயிர்கள் ஒரு மகிழ்வான அரசியல் நிகழ்வில் போகும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. 

இதனால், சமூக வலைதளமே இரண்டாக பிரிந்து, ஒரு பிரிவினர் விஜய்க்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவினர் விஜய்க்கு எதிராகவும் பேசி வருகின்றனர். 

இன்னும் சிலர், இதனை அரசியல் ஆதாயங்களுக்காகவும் பயன்படுத்தி கொள்கின்றனர். இதனை விஜய் எப்படி கையாளப்போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05