Sep 29, 2025 - 10:57 AM -
0
யாழில் நேற்று (27) வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி ராஜபாரதி (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் அரியாலை - நாவலடி பகுதியில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று (27) காலை வரம்பு கட்டுவதற்காக அங்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று இரவு வரை அவர் திரும்பி வராத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடிச்சென்றனர்.
இதன்போது அவர் அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெளி ஒன்றில் சடலமாக காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
--

