சினிமா
வௌியான அதிர்ச்சி தகவல்

Sep 29, 2025 - 04:51 PM -

0

வௌியான அதிர்ச்சி தகவல்

என் இனிய தமிழ் மக்களே என்ற கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை நேர்த்தியாக இயக்கி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 

அவருடைய மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நடிகராக கால் பதித்தவர் மனோஜ். இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையை தள்ளிவைத்துவிட்டு அப்பா ஆசைக்காக நடிகராக 1999ம் ஆண்டு தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானார். 

ஆனால் நடிகராக அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. மனோஜ் பாரதிராஜாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு திடீர் உயிரிழந்தார். 

அவரின் இறப்பு அனைவரையும் தாண்டி பாரதிராஜாவை மிகவும் தாக்கியது. 

தனது மகன் இழப்பில் இருந்து மீண்டு வராத பாரதிராஜா இந்த துயர சம்பவத்தில் இருந்து வெளியே வர மலேசியா சென்றுள்ளாராம், தற்போது தனது மகளுடன் வசித்து வருகிறாராம். 

கடந்த 3 வருடங்களாகவே உடல் நிலை சரி இல்லாமல் இருக்கும் அவர் மனவேதனையால் இன்னும் சோர்ந்துவிட்டாராம். மகனின் நினைவால் தன்னுடைய நினைவாற்றலை மெல்ல மெல்ல பாரதிராஜா இழந்து வருவதாக அவரது சகோதரர் ஜெயராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05