Sep 30, 2025 - 09:15 AM -
0
இன்று (30) புரட்டாசி 14 ஆம் திகதி, சந்திரன் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று சித்த யோகம் உண்டு. இன்று வங்கி அரைவருட கணக்கு முடிவு. இன்று ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.
மேஷ ராசிபலன்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று சில முக்கிய மாற்றங்களை சந்திப்பீர்கள். உங்களின் பணிச் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் நல்ல பலனை தரும். இன்று அரசாங்கத்திடம் இருந்து சில சலுகைகள் அல்லது, வாய்ப்புகளை பெறுவீர்கள். இது உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். இன்று உங்களுடைய அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க வாய்ப்பு உண்டு. உங்களுடைய மாமியார் வீடு மூலம் ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான கவலை அதிகரிக்கும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் வேலை சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நாளாக இருக்கும். ஒரு கடினமான சூழலை கூட புத்திசாலித்தனத்தால் சமாளித்து முன்னேறுவீர்கள். மற்றவர்களிடம் இருந்து நிதி ஆதாயம் அல்லது நல்ல ஆலோசனை கிடைக்க கூடிய நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பது அல்லது முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டிய நாள். உங்கள் வேலை தொடர்பாக எதிர்பார்த்த பணம் கிடைக்க காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். அண்டை வீட்டாருடன் சண்டை சச்சரவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் எதிரிகளை சமாளிக்க சிரமப்படுவீர்கள். இன்று உங்கள் வேலைகள் தடுக்கப்படலாம் அல்லது தடைபடலாம். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்காது. உங்கள் இலக்குகளை அடைய கடின உழைப்பு மற்றும் உற்சாகமான மனப்பான்மையுடன் செயல்பட வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய தேவைகள் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் சில சுபகாரியங்கள் நடப்பதற்கான நல்ல சூழல் நிலவும். இன்று மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் பணம் சேரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
கடக ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு தொழில் தொடர்பாக பல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் வெற்றியை தரும். இன்று உங்கள் நிதி நிலை குறித்து கவலைகள் குறையலாம். சமூக சேவை செய்பவர்கள், அரசியலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். இன்று புதிய நிறுவனத்தில் வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று மனைவியிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பு மற்றும் போட்டி தொடர்பான விஷயங்களில் சிறப்பாக செயல்படுவார்கள்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். உங்கள் மனம் மற்றும் உடலில் புதிய ஆற்றல் பிறக்கும். இன்று உங்களுடைய சிறப்பான அணுகுமுறையால் தொழிலில் இனிமையான சூழல் உருவாகும். இன்று உங்கள் எதிரிகளை எளிதாக முடியும்.மாணவர்கள் படிப்பை விட பொழுதுபோக்கு விஷயங்களில் அதிகம் செலவிடுவார்கள். இன்று உங்கள் குழந்தைகள் தொடர்பான பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள்.இன்று உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்தவும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு வேலையில் நிலைமை சாதகமாக இருக்காது என்பதால் இந்த விஷயத்தையும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். இன்று குடும்பத்தில் சொத்து தொடர்பான பிரச்சனைகள் சலசலப்பை ஏற்படுத்தும். இதனால் மனவேதனை அடைவீர்கள். இன்று உங்களுடைய சகோதரர் அல்லது சகோதரியின் திருமணம் தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். கோயிலுக்கு செல்லுதல் சுப காரியத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்கள் நடக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி நண்பர்கள் உங்கள் பணியிடத்தில் எதிர்பார்த்த வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். இன்று உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் சற்று குறையும். சொத்து தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்று உங்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, சூழலை புரிந்து கொண்டு நடக்க வேண்டிய நாள்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் தொழில் தொடர்பாக கவலை ஏற்படும். இன்று தேவையற்ற நிதி இழப்பை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. அதனால் முதலீடு செய்வது அல்லது கடன் கொடுப்பது தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. இன்று உங்களுடைய பணிகளை முடிப்பதில் தாமதம் சந்திக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தங்களின் எதிர்காலம் திட்டங்கள் குறித்து சரியாக ஆராய்ந்து செயல்படவும். இன்று உங்கள் வேலையில் எதிர்பார்த்த இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு முக்கியமான வேலைகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டிய நாள். உங்கள் செயல்படுதல் மிகுந்த மகிழ்ச்சியை தரும். எதிர்காலம் தொடர்பான உங்களுடைய கவலைகள் தீரும். பிறரிடம் சிக்கி உள்ள உங்களுடைய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புகள் உண்டு. விளையாட்டு போட்டி, தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். உங்கள் காதல் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவீர்கள்.
மகர ராசி பலன்
மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு மிகவும் குழப்பமான நாளாக இருக்கும். உங்கள் துணைக்கு பரிசு வாங்கி தர நினைப்பீர்கள். உங்கள் வேலை தொடர்பாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும். சரியான நேரத்தில் உங்கள் வேலைகளை முடிக்க முடியும். இன்று வண்டி வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.. தர்ம காரியங்களில் ஆர்வமும், அதற்காக செலவும் செய்ய வாய்ப்பு உண்டு. திருமண வாழ்க்கையில் உள்ள குழப்பம் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு நண்பர்களுடன் வணிக விஷயங்கள் குறித்து விவாதிப்பீர்கள். உங்களின் ஆலோசனை உங்கள் சொந்த தொழில் தொடர்பாக நன்மையை தரக்கூடியதாக அமையும். இன்று உங்கள் மன நிலையில் கொஞ்சம் பலவீனமாக உணர்வீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட காலமாக சொத்து வாங்க விரும்பும் நபர்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்கள் துணையின் ஆலோசனை மன நிம்மதியை தரும்.
மீன ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு தொழில் தொடர்பாக தீவிரமான சிந்தனையும் செயல்பாடும் இருக்கும். நீண்ட காலமாக புறக்கணித்து வந்த வேலை அல்லது பிரச்சனைகளை முடிக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் சோம்பேறி தனத்தை விடுத்து சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். உங்கள் துணை என் ஆலோசனை உங்களுக்கு உதவும். துணைக்காக பரிசு அல்லது அவர்களின் மகிழ்விக்க நினைப்பீர்கள். மாணவர்கள் கல்வி தொடர்பாக சில ஏமாற்றங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு.