Header Logo

வடக்கு
சரத் பொன்சேகா கைது செய்துசெய்யப்பட வேண்டும்!

Sep 30, 2025 - 10:11 AM -

0

சரத் பொன்சேகா கைது செய்துசெய்யப்பட வேண்டும்!

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றோரை கைது செய்து விசாரணை மேற்கொள்வதனூடாக இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும் என அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பிராசா, தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் இன்றைய அரசு கரிசனை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை பொலிஸாருடன் பேசத்தெரியத அர்ச்சுனா எம்பி தனது தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் தமிழ் மக்களின் உறவுகளான மலையக தமிழரை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளையும் அர்ச்சுனா நிறுத்த வேண்டும். 

நீதி கேட்டு போராடும் தமிழினம் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கைக்கு கொண்டாட்டமாகவே இருக்கும் என்பதையும் அர்ச்சுனா விளங்கிக் கொள்ளவேண்டும். 

அந்தவகையில் முட்டாள் தனமாக அமைச்சர் சந்திரசேகரை தாக்குவதை அர்ச்சுனா கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன். 

அத்துடன் கடந்தகால விடயங்களை கூறி அர்ச்சுனா மன்னார் விடயத்தில் சாக்குப் போக்கு காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது. இது எமது மக்களின் இருப்புக்கான போராட்டம். 

இதை முன்னெடுக்கும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மன்னார் சென்று போராடத்தை வலுப்படுத்த வேண்டும். 

மேலும் இறுதி யுத்த காலப் பகுதியில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த போராளிகள் மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு வெளிக்கொணர வேண்டும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title