உலகம்
இந்தோனேசியாவில் பாடசாலை இடிந்து வீழ்ந்ததில் பலருக்கு காயம்

Sep 30, 2025 - 12:16 PM -

0

இந்தோனேசியாவில் பாடசாலை இடிந்து வீழ்ந்ததில் பலருக்கு காயம்

இந்தோனேசியாவின் சிடோர்ஜோ நகரில் உள்ள கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த இஸ்லாமிய பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அனர்த்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த பாடசாலையின் மாணவர்கள் சமய பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள பல மாணவர்களையும் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05