Sep 30, 2025 - 03:34 PM -
0
கிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் இன்று (30) வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
அந்த பகுதியில் நேற்று (29) ஒரு வெடிப்பு சம்பவம் இடம்பெற்று இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் தேடுதல் நடவெடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
இதன்போது வெடிக்காத நிலையில் வெடிகுகள் காணப்பட்டன. இந்நிலையில் அதனை மீட்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
--

