Oct 1, 2025 - 08:03 PM -
0
வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடற் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. 
இன்று (1) மதியம் 1:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. 
தீயில் மீன்பிடி படகு மற்றும் கடற் தொழில் உபகரணங்கள் முழுமையாக எரிந்துள்ளன. 
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 
இது தற்செயலாக இடம்பெற்றதா? அல்லது எவரேனும் தீ வைத்தனரா என்பது கண்டறிய வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
இச் சம்பவத்தின் போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடல் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளமை தெரிய வருகிறது
--

