Oct 2, 2025 - 01:33 PM -
0
பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி 'தேவி 2', 'வீரமே வாகை சூடும்', அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பல தெலுங்கு படங்களில் நடித்து அவர் புகழ்பெற்றார்.
இந்நிலையில், டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது கணவர் மீது அவரது வீட்டுப் பணிப்பெண் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ஹயாதி மற்றும் அவரது கணவர் தன்னை துன்புறுத்தியதாகவும், நிர்வாண வீடியோ எடுக்க முயன்றதாகவும், சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜூப்ளி ஹில்ஸ் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை டிம்பிள் ஹயாதி, 2023 இல் ஐபிஎஸ் அதிகாரியின் கார் மீது செருப்பு வீசிய சர்ச்சையிலும் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

