Oct 2, 2025 - 01:43 PM -
0
Update
October 2, 2025 04:00 pm
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் குழுவினால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இன்று காலை வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
……………………..
October 2, 2025 01:43 pm
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.