Oct 2, 2025 - 02:57 PM -
0
ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸும், நடிகை அனா டி அர்மாஸுக்கும் விண்வெளியில் திருமணம் நடைபெறவிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் டாம் க்ரூஸ் (63) மற்றும் நடிகை அனா டி அர்மாஸ் (37) இருவரும் நீண்டகாலமாகவே காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும், அதுவும் விண்வெளியிலோ அல்லது விமானத்தில் இருந்து ஸ்கைடைவிங் செய்துகொண்டு இருவரும் திருமணம் செய்யவிருப்பதாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கூறுகின்றனர்.
டாம் க்ரூஸ், ஏற்கெனவே 3 முறை விவாகரத்து பெற்றவர் என்பதும், அனா டி அர்மாஸ் ஒருமுறை விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

