சினிமா
விஜய் உடனே கைது செய்யப்படுவார்!

Oct 2, 2025 - 04:53 PM -

0

விஜய் உடனே கைது செய்யப்படுவார்!

நடிகர் விஜய் கரூரில் அரசியல் பிரச்சாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்திய அளவில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் பற்றி நடிகர் விஜய் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் தவெக கட்சியில் இரண்டாம் நிலையில் உள்ள புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். 

கரூர் சம்பவம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து தனிநபர் ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு நியமித்து இருக்கிறது. அருணா ஜெகதீசன் ஆணையம் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில் 'அருணா ஜெகதீசன் ஆணையம் விஜய்யை கைது செய்ய சொன்னால் உடனே விஜய் கைது செய்யப்படுவார்" என கூறி இருக்கிறார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05