மலையகம்
தாஜூதீனின் மரணம் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை

Oct 3, 2025 - 01:28 PM -

0

தாஜூதீனின் மரணம் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை

தாஜூதீனின் மரணம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

இந்த மரணத்தில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்தக் கொலையுடன் கூடிய சம்பவத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

நேற்று (02) ஹட்டன் பகுதியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், 

"நாட்டில் இடம்பெற்ற ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக சட்டப்படியான விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை எமது அரசாங்கம் வழங்கும். ஆகவே, இதில் நாமல் மட்டுமல்ல, வேறு எவராக இருந்தாலும் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை." 

"எமது அரசாங்கத்தில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், அவற்றைத் திருத்தி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம். எமது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது என்பது கடினமான விடயமாகும். நாம் கொண்டு வந்துள்ள புதிய சட்டமூலம், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை அல்ல. பாடசாலைகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே ஒரு வேறுபாடு உள்ளது. அது ஒரு நல்ல விடயமாகவே நாம் கருதுகிறோம்," என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05