Oct 3, 2025 - 05:50 PM -
0
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று (02) மாலை கண்டுபிடிக்கப்பட்டன. 
காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 
குறித்த தகவல் காணி உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிஸார் விசேட அதிரடி படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நிலையில் இன்று (03) பிற்பகல் ரவைகள் அகற்றப்பட்டன. 
இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த வெடிபொருட்கள் விசேட அதிரடி படையினரால் இன்று அகற்றப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 
இதன்போது, Gpmp 1015 தோட்டாக்கள் அகற்றப்பட்டன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

