Oct 3, 2025 - 07:16 PM -
0
கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இன்று (03) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
இயக்கச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த காணிக்குள் குண்டுகள் காணப்படுவதை அவதானித்தார். 
சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோது சம்பவ இடத்திற்கு உடனடியாக மருதங்கேணி பொலிஸார் விரைந்து சென்று குறித்த பகுதியில் பாதுகாப்பினை பலப்படுத்தினர். 
நாளை (04) நீதிமன்ற அனுமதியின் பின் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
--

