வடக்கு
மூன்று இடங்களில் வெடிக்காத நிலையில் இனங்காணப்பட்ட குண்டுகள்

Oct 4, 2025 - 11:01 AM -

0

மூன்று இடங்களில் வெடிக்காத நிலையில் இனங்காணப்பட்ட குண்டுகள்

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் கோவில் வயல் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று பகுதிகளில் குண்டுகள் இனங்காணப்பட்டுள்ளது. 

மண்டலாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த காணிக்குள் குண்டுகள் காணப்படுவதை அவதானித்தார். 

சம்பவம் குறித்து உடனடியாக மருதங்கேணி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட போது சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த மருதங்கேணி பொலிஸார் விரைந்து சென்று குறித்த பகுதியை உடன் பாதுகாப்பான பகுதிக்குள் கொண்டுவந்தனர். 

காணிக்குள் காணப்பட்ட அனைத்து குண்டுகளும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவை தற்போது 81-2, RPG _ 2, 60 _ 3, Dompa 1 என ரக குண்டுகள் என இனங்கானப்படுள்ளன. இக் குண்டுகள் இன்று (04) நீதிமன்றஅனுமதியின் பின் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05