சினிமா
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்?

Oct 4, 2025 - 01:04 PM -

0

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. 

இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருவரின் காம்போவும், இவர்கள் நடித்த காதல் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 

இதனிடையே, இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்களும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதற்கு இருதரப்பில் இருந்து பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து, இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளியாகியது. மேலும், இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

நேற்று (03) நடைபெற்ற திருமண நிச்சயதார்த்ததில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களின் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05