Oct 4, 2025 - 03:14 PM -
0
தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சிக்கான அலுவலகமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் இன்று (04) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
இதன்போது விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன. 
இதில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ரஜீவன், வைத்தியர் பவனந்தராஜா, தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
--

