Oct 5, 2025 - 11:24 AM -
0
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு இனந்தெரியாதோர் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (4) இரவு 10.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாதோர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த தாக்குதலில் வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
வீட்டில் இருந்தவர்கள் அயலவர்களை அழைத்த நிலையில், தாக்குதலை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
--

