வடக்கு
யாழில் 120 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

Oct 6, 2025 - 01:42 PM -

0

யாழில் 120 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்துடன் 51 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த கைது நடவடிக்கையை இன்று (06) முன்னெடுத்தனர். 

எட்டு கிராம் ஹெரோயின், 16 கிராம் ஐஸ், 120 போதை மாத்திரைகள் என்பனவும் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணத்தொகையும் குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டது. 

குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05