சினிமா
வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா சாப்டர் 1!

Oct 6, 2025 - 03:34 PM -

0

வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா சாப்டர் 1!

2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் இருந்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் காந்தாரா. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி, கடந்த வாரம் திரைக்கு வந்தது. 

இப்படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ருக்மிணி வசந்த், ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். 

 

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு உலகளவில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், நான்கு நாட்களில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 340+ கோடி வசூல் செய்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05