கிழக்கு
மீனவர்கள் வலையில் சிக்கும் அதிகளவான மீன்கள்!

Oct 7, 2025 - 07:45 AM -

0

 மீனவர்கள் வலையில் சிக்கும் அதிகளவான மீன்கள்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை - கல்முனை மீனவர்கள் வலையில் பிடிபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 வகையான பாரிய சூரை மீன்கள் வளையா மீன்கள் என மீனவர்களால் பிடிக்கப்பட்டு பல இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

அதேநேரம் நேற்றும் (06) இவ்வாறு காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதிகளில் சூரை இன மீன்கள் அதிகளவில் அந்த பகுதி மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. 

தற்போது கல்முனை பிராந்திய கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை மீனவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05