வடக்கு
போதைப்பொருளுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

Oct 7, 2025 - 10:27 AM -

0

போதைப்பொருளுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழில் போதைக்கு அடிமையான ஆணொருவர் நேற்று (06) தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். சுழிபுரம் - மூளாய் பகுதியைச் சேர்ந்த தயாபரன் முரளிவாசன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

இவர் போதைக்கு அடிமையாகியிருந்த நிலையில் தனது சகோதரியிடம் போதைப்பொருளுக்கு பணத்தினை கேட்டுள்ளார். சகோதரி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் வீட்டினுள் சென்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். வட்டுக்கோட்டை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தினர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05