Oct 7, 2025 - 12:31 PM -
0
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாத உரிமைச் சட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (7) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சில முன்னாள் ஜனாதிபதிகள் தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திய வாகனங்களை தற்போது ஒப்படைத்துள்ளனர்.
எனினும் அது அந்த சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிற விடயங்கள் தொடர்பாக ஏதேனும் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

