Oct 7, 2025 - 04:14 PM -
0
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 230 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 24 மற்றும் 23 வயதுடைய இளம் தம்பதிகள் என இருவர், நேற்று (06) மாலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் தலைமையிலான பொலிஸார் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட அதிகபட்ச ஐஸ் தொகையாக இது முதல் முறையாக பதிவாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் தலைமையிலான பொலிஸ் குழு நேற்று (06) மாலை 4.30 மணியளவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கல்குடாவில் இருந்து ஐஸ் போதைப்பொருளை முச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்ற இந்த தம்பதியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று மாலை 4.30 மணியளவில் உதவி பொலிஸ் அத்தியட்சக் கரியாலயத்துக்க அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கல்குடாவில் இருந்து ஐஸ் போதை பொருளை முச்சக்கரவண்டியில் எடுத்தக் கொண்டு சென்ற போது அவர்களை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்களிடமிருந்து 230 கிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றிய பின்னர், தம்பதியை கைது செய்யப்பட்டு முச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டது. மேலும், மொறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ஒரு பிரதான போதை வியாபாரி இந்த தம்பதியிடம் கொழும்பில் ஒரு நாய்க்குட்டியை வாங்கி வரச் சொல்லி, அதற்கு 30,000 ரூபா கூலியாக அளிக்கப்போவதாகவும், முன்பணமாக 15,000 ரூபாவை வழங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்த தம்பதி கொழும்புக்கு புகையிரதத்தில் சென்று, புறக்கோட்டை பகுதியில் ஒரு பெண்ணிடம் ஒரு நாய்க்குட்டியையும் ஒரு பையையும் பெற்றுக்கொண்டனர். பின்னர், அவர்கள் பஸ் வண்டியில் கல்குடாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
நேற்று மாலை, மொறக்கொட்டாஞ்சேனையில் உள்ள போதை வியாபாரியிடம் இந்த நாய்க்குட்டியையும் பையையும் ஒப்படைக்க முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில், தம்பதி அந்த பையை திறந்து பார்க்கவில்லை என்றும், அதில் போதைப்பொருள் இருப்பது தங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த இளம் தம்பதியை பொலிஸ் தடுப்புகாவலில் வைத்து விசாரணை நடத்துவதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
--