Oct 7, 2025 - 05:01 PM -
0
சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது சனாதனம் குறித்து பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூடிப் வலைத்தளத்தில் கமல்ஹாசன் கழுத்தை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிச்ந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சார்பில் சென்ன மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முன் ஜாமீன் கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், எந்தவித உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை, தற்செயலாக அவ்வாறு பேசியதாக கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

