Oct 8, 2025 - 05:11 PM -
0
இரசாயனவியலுக்கான நோபல் பரிசு இன்று (8) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜப்பானை சேர்ந்த சுசுமு கிடகவா (Susumu Kitagawa), இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ரொப்சன் (Richard Robson), ஜோர்டானை சேர்ந்த உமர் யாகி (Omar M. Yaghi) ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலோக - கரிம கட்டமைப்பை உருவாக்கியதற்காக இந்த 3 பேருக்கும் நோபல் பரிசு பகிரப்பட்டுள்ளது.