Oct 9, 2025 - 12:18 PM -
0
அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை, ஆலையடி வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்துக்கு அருகில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், நேற்று (08) மாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரிடமிருந்து 1.52 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இளைஞர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த டெட்டோ மல்லி என்ற இளைஞனை தேடி கைது செய்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கை, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.சமந்தவின் பணிப்புரைக்கு அமைய, அம்பாறை வலய பதில் கட்டளை அதிகாரி, பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.பி.கே.டி.ரத்னவீரவின் அறிவுறுத்தலின்படி, மட்டக்களப்பு வலய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.என்.குலதுங்கவின் வழிகாட்டுதலில், கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பி.இஹலகேவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
--