மலையகம்
கருப்புப்பட்டி அணிந்து தபால் பணியாளர்கள் போராட்டம்!

Oct 9, 2025 - 01:46 PM -

0

கருப்புப்பட்டி அணிந்து தபால் பணியாளர்கள் போராட்டம்!

உலக அஞ்சல் தினத்தில் தபால் மா அதிபர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புப்பட்டி அணிந்து நுவரெலியா பிரதான தபால் நிலைய உத்தியோகத்தர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா நகரின் மையப் பகுதியிலுள்ள பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றது. 

உலக அஞ்சல் தினத்தினை கறுப்பு தினமாக நினைவு கூரும் முகமாகவும் தபால் பணியாளர்கள், முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால் மா அதிபர் வெளியிட்டுள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நுவரெலியா பிரதான தபால் நிலையத்தில் தொழில் புரியும் ஊழியர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து குறித்த போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த போராட்டம் மதிய உணவு இடைவேளையின் போது தபால் நிலையத்தை முழுமையாக மூடி அதற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05