Oct 9, 2025 - 02:18 PM -
0
அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர், நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை விநியோகித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அம்பாறை தலைமையக பொலிஸ் பிரதான பரிசோதகர் அசேல கே ஹேரத்தின் மேற்பார்வையில், கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஆரம்ப விசாரணைகளில், கைதான சந்தேக நபர் துபாயில் இருந்து இயங்கும் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின்படி, அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் வழிகாட்டுதலில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
--